ETV Bharat / city

தமிழ்நாட்டில் 'குரங்கு அம்மை' குறித்த அச்சம் தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 'குரங்கு அம்மை பரவல்' இதுவரை இல்லை என்றும் அது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
author img

By

Published : May 27, 2022, 6:59 AM IST

சென்னை: சைதாப்பேட்டை திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை, ஜெயராமன் தெரு, மசூதி தெரு, ஆலந்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த வட கிழக்கு பருவமழையின் போது, வெள்ள பாதிப்பு சென்னையில் பெருமளவில் இருந்தது. கடந்த 2011 ஆண்டுக்கு பிறகு மழைநீர் அகற்றுவதற்கான பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

நீர் தேங்க காரணம் என்ன? : எனவே, சைதாப்பேட்டையில் மட்டும் சுமார் 27 தெருக்களில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. வரும் பருவமழை முன்பாக இந்தப் பணிகள் நிறைவடைய வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகரை அழகுப்படுத்துகிறோம் என அலங்கோலப்படுத்தி விட்டனர். நடைபாதைகளை அகலப்படுத்துவதாகக் கூறி, மழைநீர் வடிகால்களை மூடியதால்தான் கடந்த பருவமழையின்போது தியாகராயர்நகர், மாம்பலம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே தான், தற்போது மழைநீர்வடிகால்கள் சீரமைப்பு, புதிய வடிகால்கள் அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் நிலையை நிரந்தரமாக தவிர்க்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களை தேடி மருத்துவம்: 'மக்களை தேடி மருத்துவம்' ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறது. குறுகிய காலத்தில், சுமார் 70 லட்சம் பயனாளிகள் பயனடைந்து உள்ளனர். உலக வரலாற்றில் வீடுகளில் தேடிச்சென்று 70 லட்சத்திற்கு மேலாக மருந்துகள் தருவது மருத்துவம் செய்வதும் போன்ற மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது.

சென்னையில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மெகா தடுப்பூசி முகாம்: இதுவரை முதல் கட்ட தடுப்பூசி 93.73 % செலுத்தி உள்ளதோடு, இரண்டாம் கட்ட தடுப்பூசி 82.48 % செலுத்தி உள்ளார்கள். மேலும், 1 கோடியே 63 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளார்கள். ஜூன் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது. மேலும், கிங்ஸ் இன்ஸ்ட்டியூட் முதியோர் சிகிச்சை மருத்துவமனையில் கட்டடத்தின் தரம், உறுதி தன்மை குறித்து உறுதிப்படுத்த ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழு ஆய்வு செய்கின்றனர். ஆய்வு அறிக்கை அடிப்படையில் கான்ட்ராக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

குரங்கு அம்மை தமிழ்நாட்டில் இல்லை: 'குரங்கு அம்மை பாதிப்புகள்' உள்ள நாடுகளிலிருந்து, தமிழ்நாடு திரும்புவர்களிடம் அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்த வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததாக செய்த சோதனையில் அவருக்கு நெகடிவ் ஆக முடிவு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 'குரங்கு அம்மை பரவல்' இதுவரை இல்லை; தமிழ்நாட்டில் குரங்கு அம்மை குறித்தான அச்சம் தேவையில்லை' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Special: குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் என்ன? - மருத்துவர்கள் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.