ETV Bharat / city

'மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் வசூலிங்க' - அமைச்சர் காமராஜ்

சென்னை: முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களிடம் அபராதம் வசூலிக்க அமைச்சர் காமராஜ் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

kamaraj
kamaraj
author img

By

Published : Jun 10, 2020, 4:06 PM IST

தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், கரோனா தொற்று நோய் கட்டுப்படுத்துதல் குறித்து, சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவற்றின் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அலுவலர்களிடையே பேசிய அமைச்சர் காமராஜ், கரோனா பரவலைத் தடுக்க, தேவையின் பொருட்டு வெளியேவரும்போது தவறாமல் முகக்கவசம் அணிய பொதுமக்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள் மீது அபராதம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்து மக்கள் எவரேனும் வெளியில் வருவது கண்டறியப்பட்டால், அவர்களைத் தனியாக மையங்களில் தங்கவைப்பதுடன், உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: தாயகம் திரும்பிய தமிழர்கள் - திறன் பயிற்சிக்கு பதிவு செய்ய விவரம் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.