சென்னை ராயபுரம் தொகுதி 48வது வட்டத்தில் வீரபத்திர செட்டி தோட்டம் உள்ளது. இந்தத் தெருவில் தண்ணீர் ஏற்றிச் செல்லும் லாரி உள்ளே செல்ல முடியாத சூழ்நிலையில், அப்பகுதியினர் வெகு தூரம் சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலை ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த அமைச்சர் ஜெயக்குமார், தண்ணீர் கொண்டு வரும் லாரியில் நீண்ட குழாயைப் பொருத்தி அவரவர் வீட்டின் வாசலில் தண்ணீர் பிடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், அமைச்சரின் இந்த நடவடிக்கையை வெகுவாக பாராட்டியதுடன், தங்களது நன்றியையும் தெரிவித்தனர்.
இதேபோல், ராயபுரம் தொகுதியில் இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலையில் உள்ள மக்களுக்கும் அமைச்சர் ஜெயக்குமார் உதவி செய்யவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.