ETV Bharat / city

’இட ஒதுக்கீடு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது’ - அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

சென்னை: மருத்துவப் படிப்பில் உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், இத்தீர்ப்பை மதித்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என நம்புவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar
jayakumar
author img

By

Published : Jul 27, 2020, 6:34 PM IST

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் இன்று (ஜூலை 27) உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் எவ்வித தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், இது தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் எனவும், அடுத்த கல்வி ஆண்டு முதலே இதனை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜூலை 27) தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், “1991-1996 காலக்கட்டத்தில் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கு 50%, தாழ்த்தப்பட்டோருக்கு 19% என 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா வாதிட்டு அதனை பிரதமர் ஒப்புக்கொள்ளவும் செய்தார்.

இடஒதுக்கீடு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது - அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

பின்னர் அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி ஒன்பதாவது அட்டவணையில் அந்த இடஒதுக்கீடு இணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தோம். வரலாற்று சிறப்பு மிக்க இத்தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. இந்தத் தீர்ப்பின் படி, மத்திய அரசு மூன்று மாதங்களில் குழு அமைத்து இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாமல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்கும் என நம்புகிறோம் ” என்றார்.

இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்: விரைந்து சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.