ETV Bharat / city

'அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலால், கூட்டணிக் கட்சிக்கு பாதகம் இல்லை' - அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

சென்னை: "கூட்டணிக் கட்சிக்கு எந்த பாதகமும் இல்லாமல் தான் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Mar 5, 2021, 4:17 PM IST

சென்னை, அதிமுக தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோரின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறுகையில், "கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த பாதகமும் இல்லாமல் தான் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக வேட்பாளர் வெற்றி பெறும் இடத்தை பாஜக கேட்பதால் தான் அதிமுக வேட்பாளர் பட்டியலை முதலாக அறிவித்ததா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அந்த மாதிரியான எண்ணங்கள் எதுவும் கிடையாது என பதிலளித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

"அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலும் இதேப்போன்று பகுதி, பகுதியாக வெளியிடப்படுமா? அல்லது முழுமையாக வெளியிடப்படுமா?" என்ற செய்தியாளர்களின் அடுத்த கேள்விக்கு, "வேட்பு மனு தாக்கல் செய்ய 19ஆம் தேதி கடைசி நாள். ஆகவே அதற்குள்ளாக முழு பட்டியலும் வெளியிடப்படும்" என்று விளக்கமளித்தார்.

இதனையடுத்து "கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்பட்டு உள்ளதா?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "விரிசல், கருத்து வேறுபாடு எதுவும் இல்லை" என்று கூறினார்.

'வெற்றி உறுதி' - அமைச்சர் நம்பிக்கை

மேலும் பேசிய அவர், "தேர்தல் அறிக்கைக்கான குழுக்கள், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஏழாவது முறையாக இந்த ஆண்டு போட்டியிட இருக்கிறேன். ஏற்கனவே ஐந்து முறை அபார வெற்றி பெற்றுள்ளேன். 6ஆவது முறையாகவும் வெற்றி பெறுவேன்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.