அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றதற்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ” திமுகவுடன்கூட கூட்டணி அமையலாம் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து பாஜக தலைமைதான் பேச வேண்டும். ஆனால், அக்கட்சியில் ஆளாளுக்கு கூட்டணி குறித்து பேசுகின்றனர்.
தமிழ்நாட்டை கொள்ளையடித்து பாதாளத்திற்கு தள்ளியது திமுகதான். பணக்கார குடும்பமாக உருவெடுத்ததுதான் அவர்களின் ஒரே சாதனை. தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த திமுக, அதிமுகவை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்திய அளவில் பெண்களுக்கு உரிமை கொடுத்த ஒரே கட்சி அதிமுகதான். தேர்தல் நேரத்தில் பல குழுக்களை கட்சி அறிவிக்கவுள்ளது. அப்போது பெண்களுக்கு உரிமையளிக்கப்படும் “ எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'கட்டுமான பணி நிறைவு சான்று... விதியை நீக்கினால் அனுமதியை மீறுவோருக்கு என்ன தண்டனை?'