சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆந்திர மாநிலம் கிருஷ்ணாம்பட்டி கடற்பகுதிக்கு ஜூலை மாதம் 23ஆம் தேதி பத்து மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.
கடலுக்குச் சென்ற பத்து மீனவர்களும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கரைக்குத் திரும்பி இருக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் திரும்பவில்லை என்பாதால் மீனவர்களின் உறவினர்கள் சென்னை காசிமேடு மீன் வளத்துறை அலுவர்களிடம் புகார் அளித்தனர்.
அதன்படி அரசு அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஆக.22) மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர்களிடம் மீனவர்களை தேடும் பணியில் 20 கப்பல்கள்/விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நம்பிக்கையும் இருக்க வேண்டும் எனவும் ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடலுக்குச் சென்ற மீனவர்கள் மாயம்: கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!