ETV Bharat / city

'சிறுபான்மை மக்களுக்கு இதய துடிப்பாக அதிமுக அரசு உள்ளது' - அமைச்சர் ஜெயக்குமார் - ரஜினி, கமலை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: "சிறுபான்மை மக்களுக்கு இதய துடிப்பாக அதிமுக அரசும் கட்சியும் உள்ளது" என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

author img

By

Published : Mar 2, 2020, 5:32 PM IST

சென்னையிலிருந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் அரசு முறை பயணமாக டெல்லி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "விருதுநகரில் நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் அதிமுக அரசு இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு இதய துடிப்பாக அதிமுக அரசும் கட்சியும் உள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடத்துபவர்களை முதலமைச்சர் மூன்று முறை சந்தித்து பேசி உள்ளார். சட்டப்பேரவையில் தெளிவாக பேசியுள்ளார். அதனால் இஸ்லாமியர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்" என்றார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர், திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து கட்சியை தொடங்கி சிறப்பாக 11 ஆண்டுகள் ஆட்சியை நடத்தினார். அதன் பின்னர் ஜெயலலிதா 40 லட்சம் தொண்டர்களை ஒன்றரை கோடியாக மாற்றினார். அவரது மறைவுக்கு பின் ஆட்சி மூன்று மாதங்களில் போய்விடும் என்றனர். ஆனால் முதலமைச்சர் நல்ல திட்டங்களை தந்து ஆட்சியை சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறார். ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்தால் மீண்டும் 16 வயதினிலே படம் போல் ஒரு நல்ல படம் கிடைக்கலாம்" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "நேற்றும் இன்றும் நாளையும் சசிகலா விவகாரத்தில் தற்போது என்ன நிலையோ அதுதான் நிலை. மத்திய அரசை மாநில அரசு சந்திப்பது சகஜம்தான். நிதி உள்பட பல விஷயங்கள் பற்றி வெளியே சொல்ல முடியாது. மக்கள் கணக்கெடுப்பில் சில ஷரத்துகள் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் அழுத்தம் தரப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க; ‘வேளாண் மண்டலத்தைத் தொடர்ந்து பெட்ரோலிய மண்டலம்’ - முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.