மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 10 தட்டச்சர்கள், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 7 இளநிலை உதவியாளர்கள், 1 இருட்டறை உதவியாளர், 1 சமையலர், 1 மருந்தாளுநர் மற்றும் 4 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 24 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் (இ.எஸ்.ஐ) மரு. அசோக்குமார், கூடுதல் இயக்குநர் ஷம்ஷத்பேகம் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க...விவசாயிகள், அரசுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி!