சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த ஆண்டு 407 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஆயிரத்து 764 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் வட்டியில்லா கடன் போல, கால்நடைகளை மேய்ப்பதற்கு நிலம் இல்லாதவர்களும், தங்களது கால்நடைகளை வளர்ப்பதற்கு தீவனம் வாங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இந்தாண்டில் இதுவரை 263 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
5 சவரன் வரை நகை அடமானம் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு, நகை கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆட்சியில் நடைபெற்றது போல முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, கடன் வழங்குவதற்கு உரிய விதிமுறைகளை கடைபிடிக்கவும், ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நடைக்கடன் தணிக்கை செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி தீவிரம்