சென்னை: அண்ணா நகர், ஆறாவது அவென்யூவில் அமைந்துள்ள தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில், 17 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுவரும் புதிய தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேற்று (ஜனவரி 19) நேரில் ஆய்வுசெய்தார்.
அப்போது தரமான கட்டுமான பொருள்கள் உள்ளனவா, கட்டுமான பணிகள் எந்த அளவில் நடைபெற்றுவருகின்றன உள்ளிட்ட கட்டுமான பணிகள் குறித்து ஆய்வுமேற்கொண்டார். பின்பு இந்தக் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் எனப் பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு ஆணையிட்டார்.
மேலும், தற்போது தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம், இந்தக் கட்டுமான பணிகள் முடிவடைந்தவுடன் புதிய அலுவலகத்துக்கு மாற்றப்படும் என சி.வி. கணேசன் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்