பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அறிவிப்புகளை அமைச்சர் வளர்மதி சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார்.
- 1,301 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளுக்கு மின் அரைப்பான்கள் 84 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
- விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர், காப்பாளினிகளுக்கு, அண்ணா மேலாண்மை நிலையம் மூலமாக மூன்று நாள்கள் பணியிடைப் பயிற்சி 38 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
- விடுதி தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் கையுறை, முகமூடி, பாதுகாப்பு காலுறைகள் ஆகியவை 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
- விடுதிக்கு மாணவியரின் எண்ணிக்கையை 50 லிருந்து 100ஆக உயர்த்த, நான்கு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டடங்கள் தரம் உயர்த்தப்படும்.
- முதற்கட்டமாக 200 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளுக்கு குளிருடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
- கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு மேசைகள் ஒரு கோடியே 37 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
- கள்ளர் சீரமைப்புப் பள்ளி கட்டடங்களில் சாய்தள வசதி இல்லாத 199 கட்டடங்களில், இரண்டு கோடியே 40 லட்சத்து 79 ஆயிரம் செலவில் சாய்தளம் வசதி அமைத்துத் தரப்படும்.
- விடுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்குச் சிறப்பு கால முறை ஊதியம் வழங்கப்படும்
- கபரஸ்தான், அடக்கஸ்தலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
- 25 கள்ளர் சீரமைப்புப் தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளும், 25 கள்ளர் சீரமைப்புப் மேல்நிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும்.
- ஆறு கோடியே 42 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்குத் தனித்திறன் வளர்க்கும் பயிற்சியும், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சியும் அளிக்கப்படும்.
- நான்கு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில், 425 விடுதிகளுக்கு கண்காணிப்புப் படக்கருவிகள் வழங்கப்படும்.
- 45 லட்சம் ரூபாய் செலவில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் அலுவலகம் நவீனப்படுத்தப்படும்.
- சிறுபான்மையினர் உரிமை நாள் விழா கொண்டாட வழங்கப்படும் நிதியினை உயர்த்தி வழங்குவதற்காக ரூபாய் நான்கு லட்சத்து ஆறாயிரம் செலவிடப்படும்.
- கள்ளர் சீரமைப்பு அலுவலகம், 60 கள்ளர் சீரமைப்பு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணினிகளும், இன்னபிற உபகரணங்கள் 96 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்
- மூன்று கோடி ரூபாய் செலவில் 25 விடுதிகளுக்குச் சுற்றுச்சுவர் கட்டப்படும்.