சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நடத்தப்பட்ட தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இத்திறனாய்வு கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலர் கிர்லோஷ் குமார், தொழிலாளர் ஆணையத்தின் முதன்மைச் செயலர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொழிலாளர் துறை அலுவலர்களின் பணிகளை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் திறனாய்வு செய்து, கீழ்க்கண்ட ஆலோசனைகளையும் வழங்கினார்.
- 35,000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொருட்டு நிலுவையிலுள்ள நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்கி தீர்வு காணப்படும்
- அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் நிலுவையிலுள்ள பதிவு, புதிப்பித்தல், ஓய்வூதிய விண்ணப்பங்களின் மீதான நடவடிக்கையை 15 நாட்களுக்குள் முடித்திடுமாறு அறிவுறுத்தினார்
- தொழிலாளர் துறையின் நீதிசார் / சமரசம் / ஆய்வு பணிகளில் கண்டறியப்பட்ட நிலுவைகளை ஒரு மாதத்திற்குள் முடித்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- நுகர்வோர் நலன் காத்திட, சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும். குறிப்பாகச் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க, பொட்டல பொருட்களை அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்குக் கூடுதலாக விற்பனை செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எடையளவுகள் உரியக் காலத்திற்குள் முத்திரையிடப்பட வேண்டும்.
இதையும் படிங்க: அதிர்ச்சித் தகவல்: 21 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை!