ETV Bharat / city

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அன்பில் மகேஷ் ஆலோசனை - hsc exam

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வியாளர்களுடன் காணொலி வாயிலாக இன்று (ஜூன் 4) ஆலோசனை நடத்துகிறார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அன்பில் மகேஷ்
Minister Anbil Mahesh Poyyamozhi Consultation with academics
author img

By

Published : Jun 4, 2021, 8:13 AM IST

சென்னை: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்து ஒன்றிய அரசு ஜூன் 1ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் குறித்து, நேற்று முன்தினம் (ஜூன் 2) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர், முதலமைச்சரின் ஆலோசனைப்படி பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவர் நிபுணர் குழு என பல்வேறு தரப்பினரிடம் மின்னஞ்சல், இலவச அலைபேசி எண் ஆகியவற்றில் கருத்து கேட்கப்பட்டு, இரண்டு நாள்களில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருடன் இன்று மாலை 4 மணியளவிலும், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளுடன் மாலை 5 மணியளவிலும் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் அறிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டு, நாளை (ஜுலை 5) 12ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: இரண்டு நாள்களில் முடிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.