ETV Bharat / city

’தலைவர்களின் கருத்துகளை எதிர்ப்பாகக் கருதவில்லை’ - இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: 'இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை எச்சரிக்கையாக மட்டுமே பார்ப்பதாகவும் எதிர்ப்பாகக் கருதவில்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
author img

By

Published : Oct 28, 2021, 3:13 PM IST

சென்னை: சைதாப்பேட்டை, மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுத்தம் - சுகாதாரம் என்கிற தலைப்பில் நடைபெற்று வரும் இணையவழி சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.

எதிர்ப்பாகக் கருதவில்லை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”’இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை எச்சரிக்கையாக மட்டுமே பார்க்கிறேன்.

எதிர்ப்பாகக் கருதவில்லை. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களின் பின்புலம் அறிந்த பின்னரே தேர்வு செய்யப்பவர்.

தன்னார்வலர்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

எச்சரிக்கை உணர்வுடன் தன்னார்வலர்களைத் தேர்வு செய்கிறோம். மேலும், இல்லம் தேடி கல்வி என்பது மாநில அரசு நிதியிலிருந்து நடத்தப்படும் திட்டம். இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்கள் 80 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கின்றனர். அதில் 70 விழுக்காடு நபர்கள் பெண்கள் தான் பதிவு செய்திருக்கின்றனர். 10 விழுக்காடு ஆண்கள் பதிவு செய்துள்ளனர்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களில் பெண்கள், மாற்றுத் திறனாளிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் மாணவர்களின் கற்றல் குறைப்பாட்டை குறைக்க உதவும்.

முதலில் சோதனை முறை, பின்னர் விரிவாக்கம்

இந்தத் திட்டம் ஆறு மாதங்கள் 12 மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் சாதக பாதகங்களை ஆராய்ந்து இதர மாவட்டங்களில் விரிவுப்படுத்துவது குறித்து அரசு முடிவெடுக்கும்.
எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்.

இடைநிற்றலைத் தவிர்க்க இந்தத் திட்டம் வழி வகுக்கும். செயல் முறை கற்றல் முறையில் நடத்தப்படுவதால், மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது. மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் விருப்பத்துடன் தான் வர வேண்டும் என்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கூறப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கழிவறைகள் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தாா்.

இல்லம் தேடி கல்வித் திட்டம்

கரோனா கட்டுப்பாடு காரணமாக பள்ளிகள் இயங்காததால், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளது. இதனை, சரிசெய்ய பள்ளிக்கல்வித் துறையால் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னார்வலர்களைக் கொண்டு தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு நடைபெறும்.

இதையும் படிங்க: கோமாளிகளே 'இல்லம் தேடி கல்வி' திட்டம்தான் திராவிடம் - ஸ்டாலின் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.