ETV Bharat / city

பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் - மத்தியக் குழுவினர் ஆய்வு! - பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள்

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் பொருளாதார ஆலோசகர் ரஜிப் குமார் சென் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

team
team
author img

By

Published : Feb 24, 2020, 6:38 PM IST

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதியுதவியின் மூலம் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் புதிய வகுப்பறைகள் கட்டுதல், தகவல் தொழில்நுட்ப வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், மத்திய அரசின் நிதியுதவி மாணவர்களுக்கு எவ்வாறு செலவிடப்படுகிறது என்பவைக் குறித்து ஆய்வு செய்வதற்காக, மனிதவள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக்கல்வித்துறை பொருளாதார ஆலோசகர் ரஜிப் குமார் சென் தலைமையில் அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறைக்கென தனியாக தொடங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சி குறித்தும் மத்தியக் குழுவிடம் எடுத்துரைக்கப்பட்டது

பள்ளிகளில் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்ளும் அவர்களிடம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன், கூடுதல் திட்ட இயக்குநர் குப்புசாமி உள்ளிட்டோர் பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.

புதிய பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள கியூஆர் கோடினை பயன்படுத்தி, தீக் ஷா ஆப் மூலம் மாணவர்கள் கல்வி கற்பது, பள்ளிக்கல்வித்துறைக்கென தனியாக தொடங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சி குறித்தும் மத்தியக் குழுவிடம் எடுத்துரைக்கப்பட்டது.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் போன்றவற்றையும் அக்குழுவினர் பார்வையிட்டனர்

பின்னர் சென்னை எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் மாகாண மேல்நிலைப் பள்ளியை, மத்தியக்குழு நேரில் ஆய்வு செய்தது. மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டு பயன்படுத்தி கல்வி கற்பிப்பது, உயர் கணினி தொழில் நுட்ப ஆய்வகம், அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட்டுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் போன்றவற்றையும் அக்குழுவினர் பார்வையிட்டனர்.

அப்போது, பள்ளி மாணவர்களுக்காக சைக்கிள்கள் வழங்கும் திட்டம் குறித்து கேட்டறிந்த மனிதவள மேம்பாட்டுத்துறையின் பொருளாதார ஆலோசகர் ரஜிப் குமார் சென், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கானத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் - மத்தியக் குழுவினர் ஆய்வு!

இதையும் படிங்க: 'எனக்கு பள்ளிக்கூடம் போக, ஆசையா இருக்கு... ஆனா, படிக்க வசதியில்லை' - கலங்கிய மாணவிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.