ETV Bharat / city

சிறப்பு அமர்வுக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கே கடிதமா.. அதிமுக உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் கண்டனம் - MHC reprimands AIADMK members

அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வு விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு கடிதம் அளிப்பதைத் தவிர வேறு வேலை இல்லையா? என அதிமுக உறுப்பினர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 24, 2022, 9:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கிடையே அடுத்த தலைமை யார் என்ற போட்டி ஏற்பட்டது. இதன்விளைவாக அக்கட்சி தற்போது நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது.

முன்னதாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்துகொண்டு மோதிய சம்பவங்களும் தமிழ்நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தரப்புக்கு, ’ஏன் ஒவ்வொரு முறையும் நீதிபதியை மாற்றி, ஒரு சிறப்பு அமர்வை அமைக்கக்கோரி கடிதம் எழுதியவாறு உள்ளீர்கள்?’ என்று கடும்கோபத்துடன் கேள்வியெழுப்பியுள்ளது.

அதிமுகவின் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில், 'அதிமுக கட்சி 2017ஆம் ஆண்டு நடத்திய பொதுக்குழுவை எதிர்த்தும், 2021 டிசம்பரில் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்தும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்தும் வழக்குகள் தொடர்ந்துள்ளதாக' குறிப்பிட்டுள்ளார்.

ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்வதைத் தடுக்கும் வகையில், இந்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் எனக்கோரி கடிதம் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (ஆக.24) விசாரணைக்கு வந்தபோது, ’அதிமுக தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கக்கோரி பதிவாளருக்கு கடிதம் அளித்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி, ’வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்நிலையில் வேறு நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுப்பதுதான் வேலையா?’ என்றும்; ’தலைமை நீதிபதிக்கு வேறு வேலையே இல்லை என நினைக்கிறீர்களா?’ என்றும் மனுதாரர்களுக்கு கேள்வி எழுப்பினார்.

அதிமுக தொடர்பான வழக்குகளை செப்டம்பர் 9ஆம் தேதி தன் முன், விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.