சென்னை: கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்கக்கோரியும், தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு குறையாத இடத்தை ஒதுக்க வேண்டுமெனவும் தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் முன்னதாக வழக்குத் தொடர்ந்தது.
இந்நிலையில், ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு குறையாத இடம் ஒதுக்குமாறு கோயம்பேடு சந்தைக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர் மழை வரத்து குறைவு, பிற மாநில வாகனங்கள் வராதது போன்ற காரணங்களால் அதிக அளவில் உயர்ந்துள்ள தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஆர். சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளைமுதல் (நவம்பர் 30) அந்த இடத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும், சோதனை முறையில் இரண்டு வாரங்களுக்கு இந்த நடைமுறையைக் கடைப்பிடித்து, அதில் உள்ள சாதக பாதகங்களை இருதரப்பும் இரண்டு வாரங்களுக்குத் தாக்கல்செய்யுமாறும் உத்தரவிட்டு பிரதான வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: Farm laws repeal bill: வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்