சென்னை: திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் நேற்று(ஆக.30) உயர் நீதிமன்றத்தில் மனு ஒற்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சென்னை பல்கலைக்கழக சட்டக் கல்வித்துறை சார்பில், முனைவர் படிப்புகளும், எம்.எல். வகுப்புகளும் நடத்தப்பட்டுவருகின்றன. 2020-21ஆம் கல்வியாண்டில் 246 மாணவர்கள் எம்.எல். பிரிவில் சேர்ந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தொலைதூரக் கல்வியில் பயில்பவர்கள். சட்டப்படிப்புகளை ஆன்லைன் மூலமாகவோ? தொலைதூர கல்வி மூலமோ? தனி தேர்வர்களாகவோ? பயிற்றுவிக்க பல்கலைக்கழக மானியக் குழு தடை விதித்துள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழகம், அதற்கு முரணாக செயல்பட்டுவருகிறது.
எனவே எம்.எல். படிப்புகளை வழங்க சென்னை பல்கலைக்கழகத்திற்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் 2020-21ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவிடவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு இருவரும், இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தகுதி இருந்தும் பதவி உயர்வு இல்லை - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்