ETV Bharat / city

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும்

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc
mhc
author img

By

Published : Jun 28, 2021, 8:49 PM IST

தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில மனநல காப்பீட்டுக் கொள்கையை அமல்படுத்துதல், வீடற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, "சீர்" என்ற தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தியதைப் போல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, தெருக்களில் திரியும் அவர்களை மீட்டு, உரிய முறையில் கவனிக்க வேண்டும். பூந்தமல்லியில் உள்ள மறுவாழ்வு மையத்தை பராமரித்து, அங்கு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை தமிழ்நாடு அரசு 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஐந்து வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணி புரிந்தவர்களுக்கு விருது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.