ETV Bharat / city

சிவசங்கர் பாபாவின் உடல்நிலை அறிக்கை பற்றி சிறைத் துறை பதிலளிக்க உத்தரவு - நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா

சிவசங்கர் பாபாவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை கோரியும், சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரியும் சிவசங்கரனின் சகோதரி தாக்கல்செய்த வழக்கில் காவல் துறையும், சிறைத் துறையும் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Feb 7, 2022, 2:23 PM IST

சென்னை: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, சிவசங்கர் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி என்பவர் தாக்கல்செய்தார். அந்த மனுவில், நீரிழிவு, பக்கவாதம், இருதய நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்படும் தனது சகோதரருக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் மனு

அவரது தற்போதைய உடல்நிலை குறித்து தனக்கு அறிக்கை அளிக்கும்படியும், அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சைப் பெற அனுமதிக்கக் கோரியும் சிபிசிஐடி காவல் துறையிடமும், புழல் சிறை நிர்வாகத்திடமும் ஜனவரி 23ஆம் தேதி மனு அளித்தும் கருத்தில்கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தனது கோரிக்கை மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமென ஜெயலட்சுமி மனுவில் கோரிக்கைவைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து காவல் துறையும், சிறைத் துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தலில் நின்றால் ஈனம் மானம் பார்க்கக் கூடாது - உடன்பிறப்புகளுக்கு அமைச்சர் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.