ETV Bharat / city

தொலைதூர கல்வியில் சட்டப்படிப்பு; அண்ணாமலை பல்கலை.,க்கு தடை நீட்டிப்பு

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
MHC ORDER TO ANNAMALAI UNIVERSITY DISTANCE EDUCTION COURSE
author img

By

Published : Jun 19, 2021, 7:49 PM IST

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், மூன்று ஆண்டு; இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளை நடத்தி வருவதற்கு தடை கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு நடத்தப்படுவதாக மனுவில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

பார் கவுன்சில் விளக்கம்

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்த இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜூன் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய பார் கவுன்சில் தரப்பில், தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்தியா முழுவதும் 1600 சட்ட கல்லூரிகள் இயங்குவதாக பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தலைமை நீதிபதி, இந்த கல்லூரிகளில் போதுமான தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா? என கேள்வியெழுப்பினார்.

2 வார அவகாசம்

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு வழங்கப்படுகிறாதா? என்பதை தீவிரமாக கண்காணிப்பது அவசியம் என இந்திய பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இம்மனுவுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சரவை மாற்றம்- புதுமுகங்களுக்கு வாய்ப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.