ETV Bharat / city

உச்ச நீதிமன்ற வழக்கறிஞருக்கு ஓராண்டுத் தடை - ஆர் கிருஷ்ணமூர்த்திக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம்

நீதிபதியைத் துஷ்பிரயோகம் செய்யும் காணொலியைப் பரப்பி, நீதிமன்றத்தை அவமதித்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்திக்கு உயர் நீதிமன்றத்தில் ஓராண்டு வழக்காடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞருக்கு ஓராண்டு தடை, contempt of court case against SC advocate R Krishnamoorthy
உச்ச நீதிமன்ற வழக்கறிஞருக்கு ஓராண்டு தடை
author img

By

Published : Dec 18, 2021, 10:11 AM IST

Updated : Dec 18, 2021, 10:23 AM IST

சென்னை: கடந்த ஜூன் 6ஆம் தேதி கரோனா ஊரடங்கின்போது சட்டக்கல்லூரி மாணவி ப்ரீத்தி ராஜன் ஓட்டி வந்த காரை, காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, தொற்று காலத்தில் வெளியே வருவதற்கான தகுந்த பாஸ் இருக்கிறதா? என்று காவலர்கள் அவரிடம் கேட்டதைத் தொடர்ந்து, அவரின் தாயாரான வழக்கறிஞர் தனுஜா ராஜன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது, அவருக்கும் காவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அதன் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இதையடுத்து, அரசு அலுவலரை பொது வெளியில் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக, வழக்கறிஞர், அவரது மகள் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில், முன்ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியின் காணொலி

சட்டத்துறையைச் சேர்ந்தவர்களின் நடத்தை தொடர்பான விவகாரம் என்பதாலும், இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதையும் உணர்ந்த நீதிமன்றம், அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிடம் அறிக்கை கோரியது.

நீதிமன்றத்தின் இந்தச் செயலால் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கோபமடைந்து, நீதித்துறை செயல்முறையையும், தனி நீதிபதியையும் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் ஒரு காணொலியைப் பதிவு செய்தார். அதை சமூக வலைதளங்களிலும் பரப்பினார்.

இரு பிரிவுகளின்கீழ் குற்றம்

இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியின் காணொலி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது வழக்குத் தொடர்ந்து அதை விசாரணைக்கு எடுத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று (டிசம்பர் 17) விசராணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக தானாக முன்வந்து தொடரப்பட்ட கிரிமினல் அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இருப்பினும், நீதிமன்ற அவமதிப்பு, நீதி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் கிருஷ்ணமூர்த்தி குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர்.

ஒரு வாரம் சிறை, ஓராண்டுத் தடை

மேலும், ஒரு குற்றச்சாட்டிற்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் என இரண்டு குற்றச்சாட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் ஒரு வாரம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். இதுதவிர, நீதிமன்றத்தை அவமதித்த வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, உயர் நீதிமன்றத்தில் ஓராண்டு வழக்காடத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

கிருஷ்ணமூர்த்தியின் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ள கேரளா பார் கவுன்சிலுக்கும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கும் அவரின் தண்டனை குறித்து பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கிடுக்கிப்பிடி!

Last Updated : Dec 18, 2021, 10:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.