ETV Bharat / city

'பூஜை நடைமுறைக்கு இடையூறாக இருப்பவர்களை கோயிலை விட்டு வெளியே அனுப்பவும்' - நீதிமன்றம் - temple Encroachment Cases in MHC

வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக உள்ளவர்களின் பெயர்களை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அப்படிப்பட்டவர்களை வெளியே அனுப்பப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Apr 23, 2022, 2:15 PM IST

சென்னை: சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், தமிழ்நாடு அரசுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அப்போதைய தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ஆக இருந்த டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு வழக்குக்கான மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு நேற்று (ஏப். 23) வந்தபோது, பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி. செல்வராஜ், "வழக்கு குறித்த ஆவணங்கள் மாயமானது என்பது சாதாரண விவகாரம் இல்லை, தீவிரமானது. 330 வழக்குகளில் 190 வழக்குகள் மட்டுமே சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது" என குற்றஞ்சாட்டினார்.

விசாரணையில் தாமதம்: தொடர்ந்து, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன், "நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி வருகிறோம். சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். கரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது" என விளக்கமளித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள், ஏப்ரல் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்".

இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க கோரிய வழக்கில், 75 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்க அரசு என்ன நடைமுறையை கையாள்கிறது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெய்வங்கள் நிம்மதி அடையும்: இதையடுத்து, பூஜை நடைமுறைகளை அரச்சகர்கள் மறுப்பதாக தொடரப்பட்ட வழக்கில், வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக இருப்பவர்களின் பெயர் விவரங்களை தாக்கல் செய்ய கோயில் செயல் அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அப்படிப்பட்டவர்களை கோயிலிருந்து வெளியில் அனுப்பலாம் என்றும், அப்போதுதான் பக்தர்கள் திருப்தி அடைவார்கள் என்றும், தெய்வங்களும் நிம்மதி அடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு எதிரான வழக்கு: அதிமுக பதில் மனு தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.