ETV Bharat / city

உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சியாகாது :உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சியாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இலங்கை அகதி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Fasting is not an suicide, Quash the case against srilankan refugees, MHC order

author img

By

Published : Feb 19, 2021, 8:40 AM IST

சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு அகதி முகாமில் உள்ள பி. சந்திரக்குமார், தன்னை அங்கிருந்து விடுவித்து குடும்பத்தினர் தங்கும் முகாமுக்கு மாற்ற வலியுறுத்தி 2013 ஆண்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, இந்திய தண்டனை சட்டம் 309 கீழ் அவர் மீது பூந்தமல்லி காவல்நிலையத்தில் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது சென்னை பூந்தமல்லி இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது எனவும் தற்கொலை முயற்சி வழக்கில் ஒரு ஆண்டுதான் தண்டனை என்றும் ஆனால் காவல்துறை ஓராண்டுக்குப் பிறகுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். எனவே, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உண்ணாவிரத போராட்டம் நடத்துவது தற்கொலை முயற்சி ஆகாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...கோயபல்ஸ் போல பரப்புரை செய்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.