ETV Bharat / city

முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட வழக்கு: ஏபிவிபியின் மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

author img

By

Published : Sep 15, 2022, 5:50 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கோரி, அகில பாரத வித்தியார்த்தி பரிசத் என்ற அமைப்பினர் தமிழ்நாடு முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி, அவ்வமைப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டத்தில் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தொடர் மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததைக் கண்டித்தும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், கடந்த பிப்.14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தின் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கியும், உடைகளைக் கிழித்தும், காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்வரி புகார் அளித்தார். அந்தப் புகாரில் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்டோர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கலகம் செய்யத் தூண்டிவிடுதல், இரு பிரிவினரிடையே விரோதத்தைத்தூண்டுதல் ஆகிய பிரிவுகள் மற்றும் பொது சொத்தினை சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கௌசிக், உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சிதா உள்ளிட்ட 31 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவர்களது மனுவில் மற்றொரு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர் என்ற முறையில் போராடியதாகவும், முதலமைச்சரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே தங்களது நோக்கமாக இருந்ததாகவும், ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று (செப்.15) விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் வீடு முற்றுகை: ஆதார் அட்டை சமர்ப்பிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.