ETV Bharat / city

மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை தொடங்கியது - metro

சென்னை: தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் ஜானகிராமனுடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலர்கள், மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

மெட்ரோ
author img

By

Published : Apr 30, 2019, 1:57 PM IST

மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி எட்டு மெட்ரோ ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து நேற்று முதல் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் 250-க்கும் மேற்பட்ட மெட்ரோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மெட்ரோ

இந்நிலையில் இன்று பாரிமுனையில் தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் ஜானகிராமனுடன், மெட்ரோ நிர்வாக அலுவலர்களும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தரப்பினரும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். மெட்ரோ ஊழியர்கள் சார்பில் சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

Intro:Body:

தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை, சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் பெரும்பாலான பணிகளை, ஒப்பந்த அடிப்படையில் வெளி நபருக்கு வழங்குவதை எதிர்த்தும், எதிர்ப்பு தெரிவித்த 8 நிரந்தர பணியாளர்களை பணி நீக்கம் செய்த்தற்கும் எதிர்ப்பு தெரிவித்து, நிரந்தர பணியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தை தற்பொழுது தொடங்கி உள்ளது. 

இதில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சிஐடியூ தலைவர் சௌந்தரராஜன் மற்றும்  நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.