கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனைக் கட்டுப்படுத்த எவ்வித தளர்வுகளுமின்றி மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விரைவாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள சீனாவிலிருந்து ரேபிட் கிட்ஸ்களை அரசு வாங்கியுள்ளது. ஆனால், இக்கருவியின் பரிசோதனை தவறான முடிவுகளைக் காட்டுவதாக பிரச்னை எழுந்ததையடுத்து ரேபிட் கிட் பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்க்கு வந்து கொண்டிருக்கின்றன. முகக்கவசம், கிருமி நாசினி, கையுறை போன்றவையும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த கார்கோ விமானத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 86 பார்சல்கள் வந்துள்ளன. அதில் 5 பார்சல்களில் வென்ட்டிலேட்டா்கள் தயாரிக்கும் உபகரணங்களும், ஒரு பார்சலில் முகக்கவசங்களும் உள்ளன.
சென்னை விமான நிலைய பார்சல் அலுவலகத்தில் சுங்கத் துறையினா் உடனடியாக அப்பார்சல்களை ஆய்வு செய்து டெலிவரிக்கு கொடுத்து அனுப்பினா்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனை சிகிச்சை எனக்கு வேண்டாம் - பாதிக்கப்பட்ட மருத்துவர்