இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவால் அனைத்துத் துறைகளிலும் தொழில்கள் முடங்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால், புகைப்படத் தொழிலை நம்பியுள்ள மூன்று லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
கரோனா பரவலால் மண்டபங்கள், கோயில்கள் மூடப்பட்டதால் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக நிழல்படக் கலைஞர்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
அக்கலைஞர்களுக்கென தனி நலவாரியம் இல்லாததால், இதுபோன்ற காலங்களில் அரசின் சார்பில் பிற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலவாரிய உதவித்தொகை இவர்களுக்குக் கிடைப்பதில்லை.
எனவே, ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் ஆவணப்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு வழங்கும் கடமையைச் செய்துவரும் நிழல்படக் கலைஞர்கள், தங்கள் வாழ்வில் ஒளி இழந்து தவிப்பதைக் கருத்தில்கொண்டு லட்சக்கணக்கான புகைப்படக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உதவித்தொகை வழங்கி அக்குடும்பங்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'சிறுமியை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்' - ஸ்டாலின்