ETV Bharat / city

நெறிகெட்ட செயல்களை அனுமதிக்க முடியாது - தலைமைச் செயலாளருக்கு வைகோ கண்டனம்

சென்னை: கோரிக்கை மனுக்களை ஒப்படைக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தலைமைச் செயலாளர் சண்முகம் அலட்சியமாக நடந்து கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko
vaiko
author img

By

Published : May 14, 2020, 1:07 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினின் ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு உதவிகளை நாடி கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு வந்துள்ள ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு அரசிடம் நேரில் முன் வைப்பதற்காக, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை தலைமைச் செயலகம் சென்றுள்ளனர்.

அங்கு, அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஒப்படைக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்றாமல், மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இதுதான் நிலை எனில், எளிய மக்களிடம் அதிகார வர்க்கம் எப்படி நடந்துகொள்ளும்? இதுபோன்ற பண்பாடற்ற, நெறிகெட்ட மரபு மீறிய செயல்களை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகளிடம் குறைந்தபட்ச மரியாதையைக்கூட காட்டாமல், மிகுந்த ஆணவத்துடன் நடந்துகொண்ட தலைமைச் செயலாளர் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பழி போடுவதை நிறுத்துங்கள் - முதலமைச்சரை சாடிய ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.