ETV Bharat / city

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 7,257 இடங்கள் நிரப்பின

author img

By

Published : Feb 17, 2022, 9:16 AM IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் முதல் கட்ட கலந்தாய்வில் 7,254 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன எனவும், சுயநிதி கல்லூரியில் பிடிஎஸ் படிப்பில் மூன்று இடங்கள் காலியாக உள்ளது என மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. 27ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வும், 28ஆம் தேதி 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 30ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்றது. பொதுப்பிரிவில் கலந்துகொள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவுசெய்ததில் தரவரிசை பட்டியலில் 24,000 பேர் இடம்பெற்றிருக்கக் கூடிய மாணவர்கள் முதல்சுற்று கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

முதல் கட்டக் கலந்தாய்வில், முதலில் 9951 பேர் கலந்தாய்வில் பங்கேற்க பதிவு செய்தனர். அவர்களில் விரும்பும் கல்லூரிகளை 9859 பேர் பதிவு செய்திருந்தனர். மேலும், விரும்பியக் கல்லூரி மற்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பினை தேர்வு செய்து 9723 பேர் தங்களின் விருப்பத்தை இறுதி செய்து உறுதி செய்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணி

இதைத் தொடர்ந்து பிப்ரவரி ஏழாம் தேதி சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட்டனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்க்க 6082 பேருக்கு அழைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பிப்ரவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வெளியிடப்பட்டது. 12ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்ததுடன், 14ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 6658 மாணவர்கள் சேர்ந்தனர்.

இந்த நிலையில் மீதமுள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு 14ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதற்காக தரவரிசைப் பட்டியலில் 24 ஆயிரம் வரையில் இடம் பெற்றிருந்த மாணவர்களில் இனவாரியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இதன் மூலம் 596 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 21ஆம் தேதிக்குள் மருத்துவக்கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 7825 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 2060 இடங்களும் என மருத்துவப் படிப்பில் 9885 இடங்கள் உள்ளது. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்பிபிஎஸ் படிப்பில் 856 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 30 இடங்களும் அளிக்கப்படுகிறது.

சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 1169 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 573 இடங்களும் உள்ளன.
எம்பிபிஎஸ் படிப்பில் 5800 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1454 இடங்களும் என அரசு ஒதுக்கீட்டில் உள்ள 7257 இடங்களுக்கு முதல்கட்டக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் எம்பிபிஎஸ் படிப்பில் 5800 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1454 இடங்களும் நிரப்பப்பட்டன. முதற்கட்டக் கலந்தாய்வில் சுயநிதி மருத்துவக்கல்லூரியில் பிடிஎஸ் படிப்பில் 3 இடங்கள் மட்டும் காலியாக உள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்ட இடங்களின் விபரம் வருமாறு:

இதர வகுப்பினர் 2250, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1922, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் 255, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் 1452, ஆதிதிராவிடர் 1095, ஆதிதிராவிடர் அருந்ததியர் 208, பழங்குடியினர் 72 என 7254 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

சிறுபான்மை கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் 2021-2022ஆம் ஆண்டுக்கான சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள கிறிஸ்தவ மைனாரிட்டி விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மைனாரிட்டி தகுதி பட்டியலில் இடம் பெறாத விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தமிழ்நாடு நேட்டிவிட்டி சான்றிதழ் மற்றும் கிறிஸ்தவ மைனாரிட்டி சான்றிதழையும் scugdocuments@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் விண்ணப்பத்தின் எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

அதற்கு பிறகு பெறப்படும் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பிறகு கிறிஸ்தவ மைனாரிட்டி தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2001 மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் தெலுங்கு மைனாரிட்டி 5 சுயநிதி மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு 503 மாணவர்களும், மலையாளம் மைனாரிட்டியில் உள்ள 56 மாணவர்களும் தங்களுக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: 48,50,213 பேர் பயன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.