ETV Bharat / city

திருமுருகன் காந்தி மனுக்கள் தள்ளுபடி; பின்புலத்தை விசாரிக்க உத்தரவு! - மே 17

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராகவும் அவதூறாகப் பேசிவரும் திருமுருகன் காந்தியின் பின்புலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமுருகன் காந்தி
author img

By

Published : Jul 9, 2019, 6:38 PM IST

மத்திய மாநில அரசுகளை விமர்சித்தது, நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், போதுமான ஆதாரங்கள் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்குக்கான முகாந்திரம் இருப்பதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், திருமுருகன் காந்தியின் பின்புலம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரின் 8 மனுக்களையும் தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Intro:Body:இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராகவும் அவதூறாக பேசிவரும் திருமுருகன் காந்தியின் பின்புலம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* கடந்த 2018 மே மாதம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து அப்பாவி தமிழர்களை கொலை செய்துவிட்டது என்ற முகநூல் பதிவு குறித்து ஆலந்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

* 2017 ல் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையித்தில் வழக்கு பதிவு.

* 2017 ஜூன் மாதம் பாலஸ்தீன விடுதலைக்கு ஐ.நா ஆதரவு தரக்கோரி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்களை புரட்சிக்கு தூண்டும் விதமாக பேசியதாக வழக்கு பதிவு

* 2017 டிசம்பரில், மத்திய அரசு தனக்கு சாதகமான தீர்ப்புகளை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மூலமாக பெருவதாக விமரிசனம் செய்ததாக நுங்கம்பாக்கம் காவல்யநிலையத்தில் வழக்கு பதிவு.

* 2018 மே மாதத்தில் பிராமண சமுதாயத்திற்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.

* 2017 ல் நடந்த பொதுக்கூட்டத்தில் அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க மகாத்மா காந்தியை கொலை செய்தது என பேசியது தொடர்பாக எம்.ஜி.ஆர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன் மீது காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலை அறிக்கைகளை ரத்து செய்யக்கோரி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உயிர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், போதுமான ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவுக்கான முகாந்திரம் இருப்பதால் வழக்கை ரத்து செய்ய முடியாது.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்புகளை விமரிசனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமுருகன் காந்தியின் பின்புலம் என்ன என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டு மனுதாரர் தொடர்ந்த 8 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.