ETV Bharat / city

மெரினாவில் நினைவுச்சின்னம் எழுப்ப அரசாணை வெளியிட வேண்டும் என மே பதினெழு இயக்கம் கோரிக்கை

author img

By

Published : May 16, 2022, 2:17 PM IST

Updated : Sep 16, 2022, 10:30 PM IST

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மெரினாவில் நினைவு சின்னம் எழுப்ப அரசாணை வெளியிட வேண்டும் என மே17 இயக்கம் மற்றும் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"மெரினாவில் நினைவு சின்னம் எழுப்ப அரசாணை வெளியிட வேண்டும்" - மே 17 இயக்கம் கோரிக்கை

சென்னை: விடுதலை தமிழ்ப்புலிகள் சார்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார். மேலும் போராட்டத்தில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இதன்பிறகு மேடையில் பேசிய விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் "2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை நினைவுபடுத்தும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் 2016 ஆண்டு வரை அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்பு நீதிமன்றம் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடை செய்தது.

தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி, அரசே நினைவேந்தலை நடத்த வேண்டும். தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். இதனையொட்டி நினைவு மண்டபமும் எழுப்ப வேண்டும். முதலில் நினைவு சின்னம் எழுப்ப அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

இனப்படுகொலை என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்த வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் ஒன்று கூடி நடத்த அனுமதிக்க வேண்டும். இறந்தவர்களுக்கு நீர்நிலை அருகில் அஞ்சலி செலுத்துவது தமிழர்களின் பண்பாட்டு. இதற்கு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - "காவல்துறையிடம் கேளுங்கள்" - ஜெயக்குமார் ஆவேசம்

Last Updated : Sep 16, 2022, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.