சென்னை: பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் சென்சார் கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளி வாகனங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பள்ளி வாகனங்களில் கேமராக்கள், சென்சார் பொறுத்துவது குறித்து ஆட்சேபனைகள் எதாவது இருந்தால் ஜூலை 15ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி வாகனத்தில் பின், முன் பகுதியில் கேமரா இருக்க வேண்டும்.
ஓட்டுநர் பின் நோக்கி வாகனத்தை எடுக்கும்போது மாணவர்கள் இருந்தால் சென்சார் ஒலி எழுப்பும் வகையில் சென்சார் பொருத்தி இருக்க வேண்டும் என்றும் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதாக சட்ட திருத்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 3 வயது குழந்தைகளுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பாகவும் ஜூலை 6ஆம் தேதி வரை கருத்துகள் தெரிவிக்கவும் அறிவிப்பும் அரசு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: தன்பாலின சேர்க்கைக்கு மறுத்த நண்பனை கொன்ற வழக்கு: இளைஞரை விடுதலை செய்து தீர்ப்பு