தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் காற்றைவிட வேகமாக பரவிவருகிறது. முதல்முதலில் தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மார்ச் ஏழாம் தேதியிலிருந்து மே 31ஆம் தேதிவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333ஆக இருந்த சூழலில், ஜூன் 14ஆம் தேதிவரை அதன் எண்ணிக்கை 44,661ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்துதல்ல் மையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
-
மூன்று தினங்களுக்கு முன்பு வந்து விஐடி தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கியிருந்து சரியான மருத்துவ வசதி அளிக்காமல் மரணித்த கூத்தாநல்லூர் சரீப் மரணத்திற்கு தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் @CMOTamilNadu @mkstalin pic.twitter.com/rt0uQqRuGd
— Jawahirullah MH (@jawahirullah_MH) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மூன்று தினங்களுக்கு முன்பு வந்து விஐடி தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கியிருந்து சரியான மருத்துவ வசதி அளிக்காமல் மரணித்த கூத்தாநல்லூர் சரீப் மரணத்திற்கு தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் @CMOTamilNadu @mkstalin pic.twitter.com/rt0uQqRuGd
— Jawahirullah MH (@jawahirullah_MH) June 14, 2020மூன்று தினங்களுக்கு முன்பு வந்து விஐடி தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கியிருந்து சரியான மருத்துவ வசதி அளிக்காமல் மரணித்த கூத்தாநல்லூர் சரீப் மரணத்திற்கு தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் @CMOTamilNadu @mkstalin pic.twitter.com/rt0uQqRuGd
— Jawahirullah MH (@jawahirullah_MH) June 14, 2020
இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “மலேசியாவிலிருந்து வந்து மாம்பாக்கம் விஐடி தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கியிருந்த முகம்மது சரீப் ரத்த வாந்தி எடுத்து பரிதாப மரணம். ஆம்புலன்ஸ் கேட்டும் உரிய நேரத்தில் அளிக்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால் விபரீதம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் மரணித்த முஹம்மது சரீப் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு 10லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.