ETV Bharat / city

காதல் விவகாரம்: பெண்ணை பிளேடால் கீறி கொலை முயற்சியில் ஈடுபட்டவரிடம் விசாரணை - man assault woman with blade at Chennai T nagar

காதல் விவகாரம் காரணமாக துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்ணை பிளேடால் கீறிய நபரை அக்கம்பக்கத்தினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பெண்ணை பிளேடால் தாக்கிய நபர்
பெண்ணை பிளேடால் தாக்கிய நபர்
author img

By

Published : Aug 7, 2021, 8:34 AM IST

சென்னை: தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல துணிக்கடையில் பணிபுரிபவர் வர்ஷினி. இவர் நேற்று (ஆக. 6) இரவு பணி முடிந்து வீடு திரும்ப கடையிலிருந்து வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வர்ஷினியின் கழுத்தை பிளேடைக் கொண்டு கீறியுள்ளார்.

அப்போது அந்தப் பெண் வலியால் கத்திய சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்நபரை அடித்து உதைத்து மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த வர்ஷினியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதன்பின் இளைஞரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் சங்கர் என்றும், அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

மேலும் தானும் வர்ஷினியும் துணிக்கடையில் வேலை பார்த்தபோது இருவரும் காதலித்ததாகவும், தங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதால் வர்ஷனியை கொலை செய்ய முயன்று தாக்கியதாகவும் விசாரணயின்போது சங்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் திட்டமிட்டு ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.