சென்னை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் அருகே இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போரூர் கார்டன் அருகே ஒருவர் மொபட்டில் நின்று கொண்டிருந்தார் அவரிடம் சென்று விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அவரிடம் சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் செங்குன்றம், அலமாதி பகுதியைச் சேர்ந்த சீனு (எ) அறுப்பு சீனு(33) என்பதும், மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து இரவு நேரங்களில் மதுரவாயல் பைபாஸ் அருகே நின்றுகொண்டு கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சா மற்றும் ஒரு மொபெட்டை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தொடர்ந்து கஞ்சா பல்வேறு விதங்களில் விற்பனை செய்யப்படுகிறது, சமீபத்தில் ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன. இவற்றையெல்லாம் தீவிரமாக கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்க: