ETV Bharat / city

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நண்பரை கத்தியால் குத்திக்கொன்றவர் கைது - Chennai Madhuravayal

மதுரவாயல் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் ஆத்திரமடைந்து, தனது நண்பனை ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்திக்கொன்ற நபரை காவலர்கள் கைதுசெய்தனர்.

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது

author img

By

Published : Aug 14, 2021, 5:58 PM IST

சென்னை: மதுரவாயல் அருகே வானகரம் வேம்புலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (28). இவரது நண்பர் ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (22). இருவரும் லாரியில் இருந்து லோடு இறக்கும் வேலை செய்துவந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாஜியின் தாய் சரசுக்கு வாகன விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ செலவிற்காக ரூ. 50 ஆயிரம் பணத்தை சதீஷிடம் கடனாக கேட்டுள்ளார். சதீஷ் அவருக்கு தெரிந்த இடத்தில் ரூ. 50 ஆயிரம் பணத்தை கடனாக வாங்கிக் கொடுத்துள்ளார்.

நண்பரை கொன்றவர் கைது

ஆனால், இதுவரை வாங்கிய பணத்தை பாலாஜி திருப்பித் தராமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஆக. 13) போதையில் பாலாஜி வீட்டிற்குவந்த சதீஷ், அவரது தாய், தந்தையிடம் பணம் கேட்டு தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர். அப்போது சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலாஜியை குத்த முயன்றுள்ளார்.

சுதாரித்துக்கொண்ட பாலாஜி அந்த கத்தியை பிடுங்கி சதீஷை குத்தினார். இதில் சதீஷ் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இருந்தாலும் அவரை விடாமல் சிறிது தூரம் சாலையில் துரத்திச்சென்று, கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையில் விரைந்துவந்த மதுரவாயல் காவலர்கள் இறந்துபோன சதீஷ் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த பாலாஜியை காவலர்களால் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: 'சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.