ETV Bharat / city

புதுச்சேரியில் சொகுசு காரில் சாராயம் கடத்திய நபர் கைது - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

புதுச்சேரி: சொகுசு காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சாராயம் நடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரியில் சொகுசு காரில் சாராயம் கடத்திய நபர் கைது

author img

By

Published : Jun 4, 2021, 11:34 AM IST

புதுச்சேரியில் ஊரடங்கை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. மது கிடைக்காமல் 'குடி'மகன்கள் செய்வதறியாது புலம்பி வருகின்றனர். இச்சூழலைப் பயன்படுத்தி பலர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். சட்டவிரோதமான மது விற்பனையில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்யும் முயற்சியிலும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி புதுச்சேரியை அடுத்த பாகூரில் ஆய்வாளர் வரதராஜன் தலைமையிலான காவலர்கள் நேற்று (ஜூன்.3) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பின்னாச்சிக்குப்பம் வழியாக வேகமாக வந்த காரை நிறுத்துமாறு, காவலர்கள் சமிக்ஞை செய்தனர். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அதிக வேகமாக சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி, வயல்வெளியில் இறங்கி நின்றது.

உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். காரில் நடத்தப்பட்ட சோதனையில் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு கேன்களில் 300 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். விசாரணையில் பாகூர் வீரன் கோவில் தெருவைச்சேர்ந்த வீரமணி, கரோனாவைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து சாராயம் கடத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சாராயத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், ஓட்டுநரைக் கைது செய்தனர்.

இதேபோன்று மணல்மேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி விற்க முயன்ற அழகியநத்தத்தைச் சேர்ந்த கலைமணியையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட, தலா 35 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க : சாராய ஊறல் போட்ட பால் வியாபாரி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.