ETV Bharat / city

தமிழகத்தின் கற்பித்தல் முறையை பார்வையிட்ட மலேசிய குழுவினர்! - மலேசிய நாட்டுக் கல்விக் குழு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையினை மலேசிய நாட்டு கல்விக் குழுவினர் பார்வையிட்டு அறிந்துகொண்டனர்.

team
team
author img

By

Published : Jan 22, 2020, 8:32 PM IST

தமிழ்நாடு - மலேசியா இடையே கல்வி பரிமாற்ற நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக மலேசிய நாட்டின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் அடங்கிய 19 பேர் கொண்ட குழு தமிழ்நாடு வந்துள்ளது.

அந்த குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்றும், அதன் முறைகள் குறித்தும் கண்டறிந்துவருகின்றனர். இந்த முறைகளை மலேசியாவில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்துவருகின்றனர்.

அதன்படி, சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த மலேசிய நாட்டின் கல்விக் குழுவினர் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையை கண்டறிந்தனர். அப்போது, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் ஒரு பாடலை செயல்முறை விளக்கத்துடன் ஆசிரியர் கற்பித்தார். பின்னர், கபடி ,சிலம்பம், எறிபந்து, பாக்சிங் போன்ற மாணவர்களின் இணைச் செயல்பாடுகளையும் அவர்கள் கண்டு ரசித்தனர். தமிழ் கற்பித்தல், ஆங்கிலப் பேச்சு பயிற்சி போன்றவற்றையும் அவர்கள் கேட்டு தெரிந்துகொண்டனர்.

பள்ளியில் ஆசிரியை ஒருவர் தமிழ் திரைப்பாடல்களை பாடியபொழுது, அவருடன் சேர்ந்து மலேசியாவிலிருந்து வந்த ஆசிரியரும் தமிழில் நன்றாகப் பாடலைப் பாடி அசத்தினார்.

பின்னர் இதுகுறித்து, மலேசிய நாட்டின் தமிழ்வழி பள்ளி தலைமையாசிரியர் மோகன் கோவிந்தன் கூறும்போது, ” தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்பித்து வருகின்றனர். மலேசியாவில் இலக்கணம், இலக்கியம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து கற்பித்துவருகிறோம். செயல்முறையுடன் தமிழர் பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கற்பிக்கும்பொழுது நமது கலாசாரம் தொடர்ந்து பாதுகாக்கப்படும். மலேசியாவிலும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கற்றல், கற்பித்தல் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் சூழ்நிலைக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுவருகிறது “ என்றார்.

தொடர்ந்து, மலேசியாவிலிருந்து வந்திருந்த தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் கூறும்போது, ” தமிழ்நாட்டில் கல்வி முறையினை தெரிந்துகொள்வதற்காக மலேசியாவிலிருந்து 50 ஆசிரியர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளோம் ” என கூறினார்.

மேலும், மலேசியா நாட்டின் கல்வி அலுவலர் அமிர்தலிங்கம் கூறும்போது, ” தமிழ்நாட்டில் கல்வி கற்பிக்கும் முறை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. நாங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையினை தெரிந்துகொண்டு மலேசியா நாட்டில் அதனை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம் ” என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் வசதிகள் குறைவாக இருந்தாலும், மாணவர்களை தகுதி படைத்தவர்களாக ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதேபோல் மலேசியாவிலுள்ள தமிழ்வழி மாணவர்களையும் பன்மொழி திறனுள்ள மாணவர்களாக உருவாக்குவோமென மலேசிய நாட்டுக் கல்வி குழுவினர் உறுதிபட தெரிவித்தனர்.

தமிழகத்தின் கற்பித்தல் முறையை பார்வையிட்ட மலேசிய குழுவினர்

இதையும் படிங்க: தீவுத்திடலில் தீ இல்லாத சமையல் போட்டி- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்

Intro:தமிழகத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையை மலேசிய குழுவினர் பார்வை

Body:சென்னை,

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையினை மலேசியா நாட்டில் கல்வி குழுவினர் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.

தமிழகம் மலேசியா இடையே கல்வி பரிமாற்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மலேசிய நாட்டின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அடங்கிய 19 பேர் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.

அந்தக் குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன எனவும், அதன் முறைகள் குறித்தும் கண்டறிந்து வருகின்றனர். இந்த முறைகளில் மலேசியாவில் தமிழ் வழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மலேசியா நாட்டின் கல்வி குழுவினர் வருகை புரிந்து மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையை கண்டறிந்தனர்.

எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் ஒரு பாடலை செயல்முறை விளக்கத்துடன் ஆசிரியர் கற்பித்தார். இதனை மலேசியா கல்வி குழுவினர் கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து மலேசியா கல்வி கற்கும் மாணவர்களின் இணைச் செயல்பாடுகளில் விளையாட்டுகளை நடத்தி காண்பித்தனர்.
கபடி ,சிலம்பம், எறிபந்து,பாக்சிங் போன்றவற்றையும் கண்டு ரசித்தனர். அப்பொழுது மாணவர்கள் விளையாடுவதற்கான பாட வேளையில் நேரம் ஒதுக்கப்படுகிறதா? என்பது குறித்தும், உடற்பயிற்சிக்கான பாடத்திட்டம் தனியாக உள்ளதா ?எனவும் கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து பள்ளி கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் மாணவர்களுக்கு பாடப் புத்தகத்தில் உள்ள க்யூ ஆர் கோடு பயன்படுத்தி கற்பிக்கும் முறையில் ஆசிரியர்கள் எடுத்துக் கூறினர். பாடங்கள் அனைத்தும் வீடியோ முறையில் கற்பிப்பதையும் கண்டறிந்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

மேலும் மாணவர்களுக்கு எளிய வழியில் தமிழ் கற்பித்தல், ஆங்கில பேச்சு பயிற்சி போன்றவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

பள்ளியில் ஆசிரியை தமிழ் பாடல்களை பாடினார். அவருடன் மலேசியாவிலிருந்து வந்த தலைமையாசிரியர் தமிழில் நன்றாக பாடலை பாடினார்.

மலேசிய நாட்டின் தமிழ்வழிப் பள்ளி தலைமையாசிரியர் மோகன் கோவிந்தன் கூறும்போது, தமிழகத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை கண்டறிவதற்காக வருகை புரிந்தோர். இங்கு மாணவர்களுக்கு பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கற்பித்து வருகின்றனர்.. மலேசியாவில் இலக்கணம் இலக்கியம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து கற்பித்து வருகிறோம். செயல்முறை யுடன் தமிழர் பண்பாடு களுக்கு முக்கியத்துவம் அளித்து கற்பிக்கும் பொழுது நமது கலாச்சாரம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் . மலேசியாவிலும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கற்றல் கற்பித்தல் முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 21ம் நூற்றாண்டின் சூழ்நிலைக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மலேசியாவிலிருந்து வந்திருந்த தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் கூறும் பொழுது, தமிழகத்தில் கல்வி முறையினை கற்பதற்காக மலேசியாவிலிருந்து 50 ஆசிரியர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளோம். தமிழகத்தில் பள்ளிகளில் வசதிகள் குறைவாக இருந்தாலும், மாணவர்களை தகுதி படைத்தவர்களாக ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். அதேபோல் மலேசியாவிலுள்ள தமிழ் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பன்மொழி திறனுள்ள மாணவர்களாக உருவாக்க உள்ளோம் என தெரிவித்தார்.

மலேசியா நாட்டின் கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் கூறும் பொழுது, தமிழகத்தில் கல்வி கற்பிக்கும் முறை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. நாங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை தெரிந்து கொண்டு மலேசியா நாட்டில் அதனை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.