ETV Bharat / city

மக்களைத் தேடி மருத்துவம்: இதுவரை 3.13 லட்சம் பேர் பயன்! - chennai news in tamil

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 3,13,085 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

makkalai-thedi-marudhuvam-update
மக்களைத் தேடி மருத்துவம் - இதுவரை பயனடைந்தோர் 3.13 லட்சம் பேர்
author img

By

Published : Sep 3, 2021, 10:04 AM IST

தமிழ்நாடு அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.

சேவைகள்

இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதுக்கும் மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை அவரவர் இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு, இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கள அளவிலான குழுவில், பெண் சுகாதார தன்னார்வலர்கள், நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், இயன்முறை மருத்துவர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் ஆகியோர் இடம் பெறுவர். பொது சுகாதாரத் துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள்.

முதற்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தின் பிற கிராம, நகர்ப்புறப்பகுதிகளில் மக்களை சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும்.

இந்நிலையில், இத்திட்டம் தொடங்கப்பட்டு நேற்று (செப்.02) வரை

  • உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் – 1,38,910 நபர்களுக்கும்,
  • நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 92,348 நபர்களுக்கும்,
  • உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 62457 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 92,348 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 9,792 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. தவிர, 34 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தினால் மொத்தம் 3,13,085 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கண் தானம் செய்ய முன்வந்த இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.