ETV Bharat / city

தோல்வியில் இருந்து மீளுமா மக்கள் நீதி மய்யம்? - மீழுமா மக்கள் நீதி மய்யம்

மக்களவை தேர்தல் 2019க்கு பின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியிருந்தது. ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 2.67 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்று அக்கட்சி ஏமாற்றத்தைத் தந்தது. பெரும் சக்தியாக மாறக்கூடும் என நம்பப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள், தேர்தல் வாக்குகள் ஏற்படுத்திய பாதிப்புகள் என அனைத்து கேள்வியையும் முன்வைத்து இந்த செய்தித் தொகுப்பில் பயணித்துப் பார்க்கலாம்.

makkal needhi maiam party in and as, மக்கள் நீதி மய்யம் கட்சி, மநீம, mnm, சட்டப்பேரவைத் தேர்தல் 2021, மநீம வாக்கு வங்கி, மக்கள் நீதி மய்யம் வாக்கு வங்கி, நாம் தமிழர் கட்சி, அதிமுக, திமுக, அமமுக, மீழுமா மக்கள் நீதி மய்யம்
மநீம தலைவர் கமல்ஹாசன்
author img

By

Published : May 9, 2021, 3:19 PM IST

Updated : May 9, 2021, 3:27 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இக்கட்சி தொடங்கி தனது முதல் தேர்தலை 2019ஆம் ஆண்டு சந்தித்தது. அதில் 3.7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. இதன் காரணமாக அரசியல் வட்டாரத்தில் மநீம கட்சி பெரும் சக்தியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பலம் வாய்ந்த திராவிட கட்சிகள், தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்திப் பயணிக்கும் கட்சிகள் என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கினார். ஐஜேகே, சமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து, மக்கள் நீதி மய்யம் 135 இடங்கள் என 234 தொகுதிகளிலும் தேர்தலில் களம் கண்டது.

முதலமைச்சர் வேட்பாளரான கமல் ஹாசன், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் வானதி சீனிவாசனைக் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் எதிர்த்துப் போட்டியிட்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுவரை அங்கு இழுபறி நீடித்து, முடிவில் வானதி வெற்றி பெற்றார். இதனால் ஒரு இடம் மட்டுமாவது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மநீம கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கமல் 51087 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தைப் பிடித்திருந்தார்.

மநீமவை கணித்த தேர்தல் வாக்குகள்

சட்டப்பேரவைத் தேர்தல் 2021இல் மொத்தமாக 2.67 விழுக்காடு வாக்குகளை மட்டுமே மநீம பெற்றிருந்தது. நகர்ப்புறங்களில் கட்சி ஓரளவு வாக்குகளைப் பெற்றிருந்தாலும், கிராமங்களில் அதுவும் இல்லாமல் போனது. மக்களவை தேர்தலைவிட கிட்டத்தட்ட 1% வாக்குகள் குறைவாகப் பெற்றது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், முதல் முறையாகக் களம் கண்ட மநீம, பல ஆண்டுகளாகத் தேர்தலில் களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்கு விழுக்காட்டைவிட 0.2 விழுக்காடு வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்றிருந்தது (ம.நீ.ம - 3.7%, நா.த.க - 3.9%).

makkal needhi maiam party in and as, மக்கள் நீதி மய்யம் கட்சி, மநீம, mnm, சட்டப்பேரவைத் தேர்தல் 2021, மநீம வாக்கு வங்கி, மக்கள் நீதி மய்யம் வாக்கு வங்கி, நாம் தமிழர் கட்சி, அதிமுக, திமுக, அமமுக, மீழுமா மக்கள் நீதி மய்யம்
மநீம தலைவர் கமல்ஹாசன்

ஆனால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நா.த.க 29 லட்சத்து 58ஆயிரத்து 458 (6.6%) வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக அவதாரம் எடுத்தது. மக்கள் நீதி மய்யமோ 1 லட்சத்து 58ஆயிரத்து 847 (2.8%), வாக்குகளை மட்டுமே பெற்றது. சில இடங்களில் மட்டுமே மநீம 3ஆம் இடத்தை தக்கவைத்துக் கொண்டது. பிற பெரும்பாலான இடங்கள் அனைத்திலும் நாம் தமிழர் கட்சி 3ஆம் இடத்தைப் பெற்றது.

மநீம தலைவர் அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்பதே இதற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இச்சூழலில், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடு, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலின் மூலம்தான் தெரியவரும் என மூத்த பத்திரிகையாளர் வெங்கடரமணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் மூன்றாவது கட்சிக்கான இடம் குறைவாகவே உள்ளது. கிட்டத்தட்ட 71 விழுக்காடு வாக்கு வங்கியை திமுக, அதிமுக ஆகிய பெரும் கட்சிகள் மட்டுமே பெற்றுவிடும். இதை வைத்துப் பார்த்தால், மாநிலத்தில் மூன்றாம் அணிக்கான வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

மூன்றாவது அணி

இந்தத் தேர்தலில் மூன்றாவது அணியாக நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகள் இருந்தன. 2016 தேர்தலில் பாமக, பாஜக ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரித்தது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் 2021இல், இக்கட்சிகள் அனைத்தும் கூட்டணிக்குச் சென்றுவிட்டது. அதனால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. மூன்றாவது அணி என்பது தங்கள் பலத்தை நிரூபித்து பெரிய கட்சிகளுடன் அடுத்த தேர்தலில் அந்த வாக்கு விழுக்காட்டைக் காட்டி அதிக இடங்களைப் பெறுவது மட்டுமே. நாம் தமிழர் கட்சி எப்போதும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று சீமான் கூறியிருக்கிறார். அதனால் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் வாக்கு விழுக்காடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தனியாகக் கட்சியை நடத்தினால் உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களில் வெற்றி பெறலாம். ஆனால் சட்டப்பேரவை, மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கூட்டணி வைக்கவேண்டும். ஏனென்றால் 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் தனியாகப் போட்டியிட்டு 10 விழுக்காடு வாக்குகள் பெற்று, விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட அவர் மட்டும் வெற்றி பெற்றார். மக்கள் நீதி மய்யத்தை இதனுடன் ஒப்பீடு செய்து பார்த்தால், வாக்குகளைக் குறைவாகவே பெற்றிருக்கிறது. அதனால் பெரும் சக்தியாக மநீம உருவெடுக்கவில்லை என்பதை அறியமுடிகிறது.

தற்போது இருக்கும் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுகவில் ஏதேனும் ஒரு கட்சி வலுவிழந்தால் மட்டுமே புதியதாக ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்த முடியும். மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரையில் அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்பதை உள்ளாட்சித் தேர்தல் மூலமாக மட்டுமே நாம் அறியமுடியும்.

நகர்ப்புறத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களித்துள்ளனர். கிராமப்புறங்களில், “அங்குள்ள பிரச்னைகளை பேச வேண்டும், மக்களுடன் தொடர்ந்து உரையாடவேண்டும்”. இது போல நடந்தால் மட்டுமே அம்மக்களின் வாக்குகளைப் பற முடியும்" எனத் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் குறித்து பொது வெளியில் பல்வேறு கருத்துகள் நிலவி வந்தாலும், அடுத்து வரும் தேர்தலில் கட்சி பெறப்போகும் வாக்குகளை வைத்தே, கட்சியின் பலம் என்ன என்பது சரியாகத் தெரியவரும் என்று அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.

எங்கள் இலக்கு ‘2026’

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகிய பொன்ராஜ் பேசுகையில், "மக்களவைத் தேர்தல் வேறு; சட்டப்பேரவைத் தேர்தல் வேறு. மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டோம். ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் 10.5 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். இன்னும் கட்சியின் கட்டமைப்பை அதிகரிக்க உள்ளோம். குறிப்பாக கிராமபுறத்தில் கட்சியின் கட்டமைப்பை உயர்த்த திட்டம் வகுத்து வருகிறோம்.

மநீம தலைவருடன், துணைத் தலைவர் பொன்ராஜ்

நாங்கள் நாம் தமிழர் கட்சிக்கு போட்டி இல்லை. நாம் தமிழர் கட்சி எங்களுக்கு போட்டி இல்லை. நாங்கள் மாற்றத்திற்காக வந்துள்ளோம். இந்தத் தேர்தலில் எங்கள் கொள்கைகளையும், அறிக்கைகளையும் மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. அடுத்த தேர்தலில் எங்கள் கொள்கை அறிக்கைகளை மக்களிடையே எடுத்துச் செல்வோம். பெருமளவில் வெற்றி பெறுவோம். இளைஞர்களிடத்தில் நம்பிக்கை பெறுவோம்.

எங்களுக்கு அரசியல் ஒரு கடமை, மற்றவர்களுக்கு அது பிழைப்பு. அரசியலை தொழிலாக நினைக்காமல் கடமையாக நினைத்து செயல்பட்டு வருகிறோம். கமல்ஹாசன் இந்த கடமையை விட்டு சிறிதும் வெளியேற மாட்டார். சட்டப்பேரவைத் தேர்தல் 2026இல் மக்களுக்கான ஆட்சியை நாங்கள் கண்டிப்பாக கொடுப்போம்" என்றார்.

மூத்த பத்திரிகையாளர் வெங்கட்டரமணனுடன் மநீம குறித்த உரையாடல்

மக்கள் நீதி மய்யம் குறித்து பொது வெளியில் பல்வேறு கருத்துகள் நிலவி வந்தாலும், அடுத்து வரும் தேர்தலில் கட்சி பெறபோகும் வாக்குகளை வைத்தே, கட்சியின் பலம் என்ன என்பது சரியாக தெரியவரும் என்று அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்தை முன்வைக்கின்றனர்.

Last Updated : May 9, 2021, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.