இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2010-11ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இலவச கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பின் கீழ் வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் ஆகியவற்றில் இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வருபவர்கள், கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கைம்பெண்களின் பிள்ளைகள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
’www.unom.ac.in’ என்ற இணையதள முகவரியில் வரும் 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களையும் கட்டாயம் சேர்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படாது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை எப்போது? - அமைச்சர் ஆலோசனை!