ETV Bharat / city

குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் மேலும் 60 மாணவர்களுக்கு கரோனா - எம்ஐடி கல்வி நிறுவனத்தின் மேலும் 60 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு

madras institute of technology: குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் மேலும் 60 மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நிறுவனத்தின் மேலும் 60 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Jan 7, 2022, 7:15 PM IST

madras institute of technology: குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் 1,659 விடுதி மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில், 81 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனால் எம்.ஐ.டி. கல்லூரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கல்லூரியில் பணிபுரியும் 200 ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தொற்று பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோருக்குக் குறிப்பாக 90 விழுக்காடு நபர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி காணப்படுவதாகத் தகவல் வந்தது.

அதன்பின் பாதிக்கப்பட்ட சிலர் வீட்டுத் தனிமைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் சிலர் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

அவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்தவுடன் மாணவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Cockfight: வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.