சென்னை: கடந்த, 2016ஆம் ஆண்டு, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், மதுக்கடைகள் விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதா மற்றும் தமிழ்நாடு ஆளுநர் குறித்து அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
அவதூறு வழக்கு:
அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்துள்ளதாக கூறி, தமிழ்நாடு அரசு சார்பில் இளங்கோவனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்கள் தள்ளுபடி:
இம்மனுக்கள், நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (டிச.16) விசாரணைக்கு வந்தது. அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், அவதூறு கருத்துகள் அரசு நிர்வாகத்தின் மீதானது இல்லை எனவும் கூறிய நீதிபதி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிரான 4 அவதூறு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!