ETV Bharat / city

உள்ளாட்சி உங்களாட்சி 2: 'இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை'யான வெள்ளைக்கார துரையின் கதை!

'ரிப்பன் எங்கள் அப்பன்' என்று அன்றைய சென்னைவாசிகளால் பாசத்தோடு அழைக்கப்பட 'லார்ட் ரிப்பன்' இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை நடைமுறைபடுத்தி இந்தியர்களின் நன்மதிப்பை பெற்ற அபூர்வமான வெள்ளைக்கார துரையாவார்.

ரிப்பன்
author img

By

Published : Nov 8, 2019, 9:30 PM IST

'என்னது ரிப்பன் விக்குறதுக்குனு ஒரு இடமா?' இது தான் ரிப்பன் பில்டிங் என்ற பெயரை முதன்முறை கேட்கும் நம்மூர் மக்களுக்கு பொதுவாக மனதில் எழும் எண்ணமாக இருக்கும். சென்னை சென்டரல் ரயில் நிலையம் அருகே வெள்ளை நிறத்தில் வீற்றிருக்கும் இந்த மாநகராட்சி கட்டம் 1880-களில் சென்னை மாகாணத்தின் வைசராயாக இருந்த வெள்ளைக்கார துரை ரிப்பனின் நினைவைச் சுமந்து நிற்கும் இடம் என்பது வரலாற்றைப் புரட்டிப் பார்த்த சிலருக்கே தெரியும் உண்மை.

1827ஆம் ஆண்டு லண்டனில் பெட்ரிக் ராபின்சனுக்கு மகனாகப் பிறந்த ஜார்ஜ் ராபின்சன் ரிப்பனின் பெயரை, இந்தியாவின் மெட்ரோ நகரான சென்னை மாநகராட்சி கட்டத்திற்குச் சூட்டியதில் இந்திய உள்ளாட்சி அமைப்பின் வரலாறு அடங்கியுள்ளது. இந்தியாவில் ரிப்பன் வைசராயாக பணியாற்றியது 1880 தொடங்கி 1884 வரையிலான நான்கு ஆண்டுகள் மட்டுமே. இந்த காலகட்டத்திற்குள் அவர் முன்னெடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அவரை இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

ரிப்பன் பில்டிங் எனப்படும் மாநகராட்சி கட்டடம்

இந்தியாவை அடிமைப்படுத்தி மக்களின் உழைப்பையும், மண்ணின் வளத்தைக் கொள்ளையடிப்பதையே ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்களின் குறிக்கோளாகக் கொண்டு தீவிரப்பணியாற்றினர். பல்வேறு அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு வரி வசூல் செய்து இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த விவசாயத்தை சூறையாடி லட்சக்கணக்கான மக்களை பட்டினி சாவுக்கு ஆளாக்கிய ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்தியா பெற்றிருந்தது. அதே வேளை சதி ஒழிப்பு, விதவை மறுமண சட்டம் ஆகிய முற்போக்கு சட்டங்களை உருவாக்கித் தந்த வில்லியம் பெனடிக் போன்ற கவர்னர்களும் அத்தி பூத்தார் போல் இந்தியாவுக்கு வாய்த்ததுண்டு. லார்ட் ரிப்பன் இந்தியாவை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களில் தலைசிறந்தவராக இன்றளவும் கருதப்படுகிறார்.1880-களுக்கு முன் இந்தியாவின் வைசராயாக இருந்த லார்ட் லிட்டனின் செயல்பாடுகள் மோசமாக இருக்க, அதன் தாக்கம் அன்றைய பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில் எதிரொலித்தது. அதன் விளைவாக அங்குள்ள கன்சர்வேடிவ் கட்சி தோற்கடிக்கப்பட்டு லிபரல் கட்சி ஆட்சிக்கு வர, அப்போதைய பிரதமர் கிலாட்ஸ்டோன் ரிப்பனை இந்தியாவின் வைசராயாக நியமிக்கிறார்.
சகாக்களுடன் லார்ட் ரிப்பன்
சகாக்களுடன் லார்ட் ரிப்பன்
இந்தியாவுக்கு வைசராயாக பொறுப்பேற்ற ரிப்பன், இந்திய மன்னர்கள் நிலவுடமையாளர்களுடன் அனுக்கமாகச் செயல்படத்தோடு இந்தியர்களுக்கு கல்வியளிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். 'ஹன்டர் கமிஷன்' என்ற குழு ஒன்றை நிறுவி இந்தியர்களுக்காகக் கல்வி வரன்முறைபடுத்த வழிவகை செய்தார் ரிப்பன்.

1881 ஆம் ஆண்டு இந்தியாவின் பிராந்திய மொழிகள் செய்தித்தாள்கள் வெளியாக அன்றிருந்த தடையை நீக்கினார் ரிப்பன். 1881ஆம் ஆண்டு தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களின் பணிச் சூழலை மேம்படுத்தி, வேலை செய்யும் சிறார்களுக்கான வயது வரம்பை அதிகரித்து உத்தரவிட்டார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அதிகார பரவலாக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ரிப்பன் 1882ஆம் ஆண்டு கொண்டு வந்த 'லோக்கல் செல்ஃப் கவர்மெண்ட் ஆக்ட்' எனப்படும் உள்ளாட்சி சட்டம் நவீன இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பு செயலுரு பெறத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. 1883 முதல் 1885 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பல்வேறு மாகாணங்களில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்தியர்கள் தங்கள் பிரச்னைக்கு தாங்களே தீர்வு காணும் திறன் பெறவேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சட்டமானது செயல்படுத்தப்பட்டது.

சென்னையில் உள்ள ரிப்பன் சிலையின் பழைய புகைப்படம்

எந்த பிரச்னையையும் கனிவுடன் அணுகும் மனப்பான்மை கொண்டிருந்த ரிப்பன் மீது அன்றைய மதராஸ் மாகாணம் மிகுதியான அன்பை கொண்டிருந்தது. உள்ளாட்சி அமைப்பின் தந்தையான இந்த வெள்ளைக்கார துரையை , அன்றைய மதராஸ் வாசிகள் 'ரிப்பன் எங்கள் அப்பன்' என்று அழைத்த குரல் ரிப்பன் பில்டிங்கை சுற்றி வலம்வரும் வங்கக்கடல் காற்றில் தவழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதையும் படிங்க உள்ளாட்சி உங்களாட்சி-1: இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பு உருவான கதை!

Intro:Body:

Lord Rippon father of local self govt 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.