சென்னை: நாளை மறுதினம் வானகரத்தில் நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து 26 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தங்களது தரப்பு விளக்கத்தை அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தங்கள் தரப்பில் உள்ள விளக்கங்களை அடங்கிய மனுவை கொடுப்பதற்காக திருவேற்காடு காவல் நிலையத்திற்கு சென்றார்.
அப்போது இன்ஸ்பெக்டர் இல்லாத காரணத்தால் சப் இன்ஸ்பெக்டரும் தங்களது மனுவை வாங்காததால் நீண்ட நேரம் காத்திருந்தபோது இன்ஸ்பெக்டரிடம் மட்டுமே மனுவை கொடுக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரமாகியும் இன்ஸ்பெக்டர் வராததால் அதிமுகவினர் அதிக அளவில் போலீஸ் நிலைய வளாகத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நீண்ட நேரத்துக்குப் பின்பு இன்ஸ்பெக்டர் வந்ததையடுத்து நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டிய தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது - காவல் துறைக்கு ஓபிஎஸ் மனு