நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாக தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரனை பேருராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரில், சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 5 நாட்களாக புகாரளித்தும் இதுவரை தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது.
இதனால், மழைநீர் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. எனவே, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வங்க கடலில் நாளை காலை புயல் உருவாகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்