கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை எளியோர், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் எனப் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டிலும் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் முடித்திருத்தகங்களைத் தவிர்த்து, மற்ற சிறு கடைகளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அரசு தளர்வுகளை அறிவித்திருந்தாலும், சென்னையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டே இருந்தன. குறிப்பாக ரிச்சி தெரு, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, தியாகராய நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் உணவகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தன.
கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும், நோய்த்தொற்று நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து வருவதால், கடைகளைத் திறக்க கடை உரிமையாளர்கள் அச்சப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், பிளெம்பிங், கட்டுமானப் பணி, மின் சாதனக் கடைகள் போன்ற கடைகளும் பெரும்பாலும் திறக்கவில்லை.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3ஆவது வாரத்தில் நடத்த முடிவு!