டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 27 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரண்டாம் நாளான இன்றும் தொடர்கிறது. இதுவரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 515 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 344 பதவியிடங்களுக்கு வெற்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் அதிமுக 134, திமுக 170, பாஜக 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய கம்யூனிஸ்ட் 7, தேமுதிக 2, காங்கிரஸ் 9, மற்றவை 15 உள்ளிட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக 1,512, திமுக 1,880, பாஜக 77, இந்திய கம்யூனிஸ்ட் 60, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 29, தேமுதிக 92, காங்கிரஸ் 110, என்.சி.பி 1 மற்றவை 629 என மொத்தம் 5,090 இடங்களில் 4448 பதவியிடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
9,624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் 8,130 மட்டுமே முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளது. 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இடங்களில் 48 ஆயிரத்து 675 பதவியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.